திருப்பத்தூர் - Tiruppattur

சிவகங்கை: முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்

மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வருகின்ற 15.08.2025 அன்று நடைபெறும் சுதந்திர தினவிழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருதிற்கு, 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்/பெண் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1, 2024 (01.04.2024) ஆம் தேதியின்படி, 15 வயது நிரம்பியவராகவும், மார்ச் 31, 2025 (31.03.2025) ஆம் தேதியின்படி 35 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (2024-2025) அதாவது 01.04.2024 முதல் 31.03.2025 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். இவ்விருதிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும் (சான்று இணைக்கப்பட வேண்டும்).  விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக, தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருத்தல் வேண்டும். இவ்விருதிற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இவ்விருதிற்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வருகின்ற 03.05.2025 ஆம் தேதி அன்று மாலை 4.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


சிவகங்கை