மானமதுரை - Manamadurai

பூவந்தி அருகே தொட்டில் கட்டி மீன் பிடிக்கும் இளைஞர்கள்

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள கழுங்குப்பட்டியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் உள்ளது. தொடர்ச்சியாக மதுரை மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் கழுங்குப்பட்டி கண்மாய் நிரம்பிய நிலையில் தற்போது மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்து ஆர்பரிக்கிறது. இந்த கண்மாயில் கட்லா ரோகு விரால் போன்ற நாட்டு ரக மீன்கள் அதிகளவில் காணப்படும் தற்போது தண்ணீர் நிரம்பிய நிலையில் மீன்கள் துள்ளிக் குதித்து வெளியேறுகின்றன. இதனை அப்பகுதி இளைஞர்கள் பொழுது தொட்டில் கட்டி பிடித்து வருகின்றனர் ஒவ்வொரு மீனும் ஐந்து கிலோ அளவில் உள்ளது இதனை சாலையில் செல்லும் அனைவரும் வேடிக்கையாக இன்று மாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் பார்த்துச் செல்கின்றனர்.

வீடியோஸ்


சிவகங்கை