சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சோனையா கோவில் பகுதியில் வாரந்தோறும் நடைபெறும் வாரச்சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகை தந்து கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர் இந்நிலையில் சாலை ஓரங்களிலும் வியாபாரிகள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்த நிலையில்
திருடர்கள் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சந்தைக்கு வரும் பெண்களிடம் மொபைல் போன் மணி பர்ஸ் ஆகியவை திருடுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் எழுந்து வந்த நிலையில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஒரு காவல் ஆய்வாளர் ஒரு எஸ்ஐ உட்பட 15-க்கும் மேற்பட்ட காவலர்கள் இன்று மாலை சுமார் 7மணி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் மேலும் சாலையின் ஓரங்களில் கடைகள் அமைப்பதற்கு காவல்துறையினர் கடைகள் அமைக்க கூடாது என காவல்துறையினர் வியாபாரிகளை தடுத்தனர் இதனால் வியாபாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.