காசினி கீரையில் வைட்டமின் ஏ, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. உடல் வெப்பத்தை தணிக்கக்கூடிய காசினி கீரை கல்லீரல், சிறுநீரகம், இதயம் போன்ற மிக முக்கியமான உள்ளுறுப்புகளை காக்கக்கூடியது. இது விந்தணு உற்பத்தியை ஊக்குவிக்கும் தன்மைக் கொண்டது. காசினி கீரையை சீனர்கள் கல்லீரல் நோயைக் குணப்படுத்த பயன்படுத்தியதாக ஆய்வு தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.