அரசு பள்ளி மாணவ மாணவர்கள்நடத்திய அசத்தலான அறிவியல் கண்காட்சி

64பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள வெள்ளிக்குறிச்சி உயர்நிலைப் பள்ளியில் சுமார் 120க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள், இந்நிலையில் இன்று இந்த பள்ளியில் அறிவியல் கண்காட்சியும், உணவு கண்காட்சியும் நடைபெற்றது கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தினர், அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பழைய டப்பா செம்பை வைத்து செய்யப்பட்ட ஏர் கூலர், அட்டைப்பெட்டியில் செய்யப்பட்ட நுண்ணோக்கி, காற்றாலை இயந்திரம், பேட்டரி லை, ட் சோலார் லைட் , மனித உடல் உறுப்புகள் பற்றியும் விளக்கமளித்துடன் அத்துடன் உணவு கண்காட்சியில் மாணவர்கள் தங்கள் கிராமங்களில் கிடைக்கும் பொருட்களை வைத்து சமைத்துக் கொண்டு வந்திருந்தனர் அதில் கம்மங்கூழ் , கேப்ப கூழ், புட்டு, சுண்டல் , கேசரி, குலோப் ஜாமுன், பிரியாணி, வரகு, குதிரைவாலி, கம்பு, சோளம், கொள்ளு , போன்ற தானியங்களில் செய்யப்பட்ட உணவு வகைகள் ஒவ்வொன்றாக செய்து வந்த காட்சி படுத்தினார்கள்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி