வைகை ஆற்றில் இரு கரைகளையும் தொட்டு செல்லும் மழைநீர்

74பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல், மடப்புரம், கானூர், பிரமனூர் உள்ளிட்ட கிராம விவசாயிகள் வைகை ஆற்றை நம்பியே விவசாய பணிகளை மேற்கொள்வது வழக்கம், ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே வரவேண்டிய மழை தண்ணீர் வராததால் வைகை ஆறு வறண்டு காணப்பட்டது. விவசாய பணிகளை திருப்புவனம் தாலுகா விவசாயிகள் தொடங்கவே இல்லை. 17ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மதுரை, தேனி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக வைகை ஆற்றில் மழைத்தண்ணீர் வர தொடங்கியுள்ளது. திருப்புவனம் எல்லையை மழைதண்ணீர் தொட்ட நிலையில் விவசாயிகள் கண்மாய்களுக்குதண்ணீர் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்புவனம் வைகை ஆற்றில் அருப்புக்கோட்டை கூட்டு குடிநீர் திட்ட கிணற்றிற்காக கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிந்து இன்று மாலை சுமார் 5 மணி யளவில் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் சென்றவண்ணம் உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி