ஆவின் பால் குளிரிட்டும் நிலையத்தில் அம்மோனியா வாயு கசிவு.

52பார்த்தது
சிவகங்கை அருகே 48 காலணியில் ஆவின் குளிரூட்டும் நிலையம் செயல்பட்டு வருகிறது. சிவகங்கை மானாமதுரை இளையான்குடி தாலுகா உட்பட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாட்டின் பால் சேகரிக்கப்பட்டு குளிரூட்டபட்டு வருகிறது. இந்நிலையில் ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென குழாய்களில் சென்று கொண்டிருந்த அம்மோனியா கேஸ் கசிவு ஏற்பட்டு கண் எரிச்சல் ஏற்பட்டது. இதனை நிறுத்த முடியாததால் ஊழியர்கள் குளிரூட்டும் நிலையத்திலிருந்து வெளியேறினர். உடனடியாக சிவகங்கை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு அலுவலர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உடை அணிந்து மூச்சுக் கருவி துணையுடன் அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட வாழ்வை கண்டறிந்து அவற்றை அடைத்தனர். இதனால் பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இந்த அமோனியா வாயு கசிவால் சுற்றுவட்டர பகுதிகளில் வசிக்கும் மக்கள் கண்ணெரிச்சல் ஏற்பட்டதால் சுமார் அரை மணி நேரம் அவதி அடைந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி