சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே யானை சாலை ஊரணி இந்த ஊரணியை சுற்றி 32 வீடுகள் ஆக்கிரமித்து கட்டி உள்ளனர் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்த நிலையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பேரூராட்சி சார்பில் வீடுகளை காலி செய்ய வேண்டுமென பல முறை நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளை காலி செய்யாத நிலையில் இன்று அதிகாரிகள் முன்னிலையில் வீடுகளை அகற்ற முற்பட்டனர் அகற்ற முயன்ற அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு கட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர் காவல் சார்பாய்வாளர் சிவப்பிரகாசம் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து நாங்கள் வீடுகளை காலி செய்து விடுகிறோம் என்று கூறி இன்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் கலைந்து சென்றனர்.