சிறப்பு மருத்துவ முகாம், எம் எல் ஏ பங்கேற்பு.

67பார்த்தது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாலையூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இணைந்து வரும் முன் காப்போம் திட்டம் தின் கீழ் தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், இளையான்குடிபேரூராட்சி தலைவர்நஜ்முதீன் ஆகியோர் தலைமையில்அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நிசார் முன்னிலையில் நடைபெற்றது இந்த முகாமினை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த முகாமில் ரத்த பரிசோதனை ரத்த அழுத்தம் கண் பரிசோதனை, இசி. ஜிஉள்ளிட்டபலவிதமான பரிசோதனைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. முகாமை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் இடமும் சிகிச்சை முறைகளைப் பற்றி கேட்டறிந்தார். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் உரையாற்றும் போது "தமிழக முதல்வர் பொதுமக்களுக்கு எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வீடு தூரம் சென்று மருத்துவ சிகிச்சை வரும் முன் காப்போம் போன்ற திட்டங்களை செயல்படுத்திவருகிறார் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி