லட்சுமி தீர்த்தம்ஊரணியில் கழிவுநீர் கலப்பதால் பொதுமக்கள்அவதி

50பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் பகுதியில் உள்ள ஆவரங்காடு முத்துராமலிங்கம்தெரு 16 வது வார்டு பகுதியில்சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அப்பகுதியில் லட்சுமி தீர்த்தம் என்ற ஊரணி உள்ளது இந்தஊரணியில் மஜீத் ரோடு பகுதியிலிருந்து வரும் கழிவுநீர்கள் நேரடியாக செல்வதாகவும் அந்த ஊரணி முழுவதும் மாசு அடைந்து நிலத்தடி நீரும் மாசுபட்டுள்ளதாகவும் இந்த ஊரணியில் தேங்கி இருக்கும் கழிவு நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி இரவு மற்றும் பகல் நேரங்களில் அதிக அளவு கொசு கடித்து குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதாகவும் பலமுறை இந்த ஊரணியை சீரமைத்து கழிவு நீரை பாதாள சாக்கடை செல்லும் வாய்க்காலில்சிவகங்கை நகராட்சி நிர்வாகம் இணைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இன்று பாதாள சாக்கடை திட்டத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி நகராட்சி ஊழியர்கள் மேன் ஹோல் உள்ள கழிவு நீரை அப்பகுதியில் உள்ள லட்சுமி தீர்த்த ஊரணியில் பாய்ச்சியுள்ளனர் இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியுள்ளது இதனால் பகுதியில் உள்ள பொதுமக்கள் கழிவுநீர் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி