கம்பெனி பீரையே மீண்டும் கேட்டவரின் மண்டை உடைப்பு

65பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பைபாஸ் ரயில்வே கேட் அருகே தனியார் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் ஏற்கனவே பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் அடிக்கடி மோதல்களும் நடைபெற்று வருவதாக ஏராளமானோர் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் இம்மன்றத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கும் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே உள்ள இடையர் குடியிருப்பில் சேர்ந்த கண்ணன் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அங்கு பீர் அருந்தியுள்ளார். இதையடுத்து மீண்டும் அதே கம்பெனி பீரை மீண்டும் ரூபாய் கொடுத்து கேட்டுள்ளார் அப்பொழுது ஊழியர்கள் அந்த கம்பெனி பீர் தீர்ந்து விட்டது குடித்த வேற கம்பெனி பீர் வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர் ஆனால் கண்ணன் ஏன் இல்லை என்று சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு அங்கிருந்த ஊழியர்கள் அவரை கம்பு மற்றும் ஆயுதங்களால் தாக்கியதில் மண்டை உடைத்தாக கூறப்படும் நிலையில் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மானாமதுரை போலீசார் இச்சம்பவம் குறித்து இன்று இரவு சுமார் 7 மணி அளவில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி