

பிரதமர் மோடி வருகை முன்னிட்டு ரயில் பராமரிப்பு தீவிரம்
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, தென்னக ரயில்வே ரயில் பாதைகள் மற்றும் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஏப்ரல் 6 அன்று பாம்பன் பாலம் திறப்பு விழாவை முன்னிட்டு, விபத்து மீட்பு மற்றும் பரிசோதனை ரயில் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. மதுரையில் இருந்து இன்று காலை கிளம்பிய ரயில், மானாமதுரையில் விபத்து மீட்பு மற்றும் பராமரிப்பு பணிகளை தொடங்கியது. பிரதமர் பயணிக்கும் வழியில் முக்கிய அதிகாரிகள் செல்வதை முன்னிட்டு, மானாமதுரை ரயில் நிலையத்தில் சேதமடைந்த பகுதிகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன.