ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கு நாளை (ஏப். 04) நடைபெறவுள்ளது. அதனையொட்டி, மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கு அன்னைத் தமிழில் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். மேலும், “100-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் இந்த குடமுழுக்கில் ஓதுவார்கள். அதில் பெண் ஓதுவார்களும் பங்கேற்பார்கள்" என்றார்.