சிவகங்கை மாவட்டம்,
திருப்பாச்சேத்தியை அடுத்துள்ள வைகை மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் செந்தில்வேல். இவர் வழக்கறிஞர் தொழில் செய்து வருவதுடன் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு தொகுதி பொருப்பாளராகவும் உள்ளார். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் இட பிரச்சனை இருப்பதாகவும் அது சம்பந்தமான நீதிமன்ற வழக்கில் செந்தில்வேலுக்கே சாதகமாக தீர்ப்பு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அவர் கிராமத்தில் நின்றிருந்தபோது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் செந்தில்வேலை சராமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் காவல்துறையினரும் சம்பவம் குறித்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கறிஞர் ஒருவர் தாக்கப்பட்டதை அறிந்து ஏராளமான வழக்கறிஞர்கள் குவிந்துவரும் நிலையில் அப்பகுதியில்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.