மானமதுரை - Manamadurai

சிவகங்கை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; முதியவருக்கு சிறை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் ராஜா 62. இவர் ஒரு கூலி தொழிலாளி. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது வீட்டின் அருகே குடியிருந்த சிறுமியை புறா காண்பிப்பதாக கூறி மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில். நேற்று வழக்கை நீதிபதி குற்றவாளி ராஜாவுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் ரூ. 20 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

வீடியோஸ்


சிவகங்கை