பிளாட்பாரத்தில் நின்று நண்பர்களுடன் டீ குடித்துக்கொண்டு இருந்தவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை நந்தனத்தை சேர்ந்த பாபு தேனாம்பேட்டையில் பிளாட்பாரத்தில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாக அகமத் என்பவர் ஓட்டிவந்த கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். கூலி வேலை செய்து குடும்பத்தை கவனித்தவர் மறைந்துவிட்டதாக உறவினர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.