சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூரில் திமுக மாவட்ட சிறுபான்மையர் நல உரிமை பிரிவு சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன், உரையாற்றும் போது:
சிறுபான்மையர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகளை பறிப்பதும், மத கோட்பாடுகளில் உள்ள சட்ட திட்டங்களை அழிக்கின்ற நடவடிக்கையில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டு வருகின்றனர் என பாஜகவை சாடியவர், CAA , NRC போன்ற சட்டங்களை போராடி தடுத்து நிறுத்திய இயக்கம் தான் திமுக என்றவர், ஆனால் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜகவின் தீர்மானத்தை ஆதரித்தினர். தொடர்ந்து, திமுக இயக்கம் துவங்கப்பட்ட போது அரசியலில் ஈடுபடக்கூடிய இயக்கமாக தொடங்கப்படவில்லை. தமிழர்கள் யாருக்கும் அடிமைபட்டவர்கள் இல்லை என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக சமுதாய சீர்திருத்த இயக்கமாக துவங்கப்பட்டது. 7, 8 ஆண்டுகளுக்கு பின்னர் தான் தேர்தல் களத்தில் போட்டியிட்டது. ஆனால் இன்று, புதிதாக ஆரம்பிக்கப்படும் இயக்கங்கள் கட்சியின் பெயர், கட்சி கொடியை அறிவிப்பதற்கு முன்பாகவும், பிறந்த குழந்தை பட்டப்படிப்பு முடித்தவர் போல தாங்கள் தான் அடுத்த முதலமைச்சர் என பேசுகின்றனர். இவற்றை எல்லாம் கேலி பொருளாக தான் அனைவரும் பார்க்கின்றனர் பேசினார்.