பெண் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை

64பார்த்தது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பெரும்பச்சேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன், ரிபினா தம்பதியினரின் திருமணம் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் 11 மாத ஆண் குழந்தை உள்ள நிலையில் ரிபினா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். சுப்பிரமணியனின் மதுபழக்கத்தால் அடிக்கடி சண்டை இடுவதாக கூறப்படும் நிலையில் மனைவி கோபித்துக்கொண்டு பெற்றோர் அல்லது அக்கா வீட்டிற்குச் செல்வது வழக்கம். இரு குடும்பத்தினரும் சமாதானம் செய்து மீண்டும் சேர்த்து வைப்பது வழக்கம். சம்பவத்தன்று சுப்பிரமணியன் குடித்துவிட்டு வந்து சண்டை போட்டதால் ரிபினா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ரிபினா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. பெண்ணின் இறப்பு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி