உயர் கோபுர வழக்குகள் தெரியாததால் விரலில் மூழ்கிய கிராமம்

79பார்த்தது
மானாமதுரை அருகே தெ. புதுக்கோட்டை ஊராட்சியில் தெ. புதுக்கோட்டை, சின்னபுதுக்கோட்டை, வண்ணத்தான் தெரு ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. இங்கு, கடந்த 2021-ம் ஆண்டு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ. 40 லட்சத்தில் 10 சிறு கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால், இதற்கு அப்போதே ஊராட்சி நிர்வாகம் சார்பில் நிதி விடுவிக்க முடியாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின்னர் நிதி விடுவிக்கப்பட்டது. அந்த கோபுர மின்விளக்குகள் 2 ஆண்டுகள் மட்டுமே எரிந்தன. பின்னர் காலாவதியானதால் எரியவில்லை. 10 மின்விளக்குகள் வாங்க ரூ. 4. 50 லட்சம் வரை தேவைப்பட்டது. ஆனால், ஊராட்சியில் நிதி இல்லையென்று கூறி புதிய மின்விளக்குகள் பொருத்தவில்லை. இதனால், அப்பகுதி முழுவதும் இரவு நேரங்களில் இருளில் மூழ்கியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி