சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கொங்கம்பட்டி பகுதியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 64 மாணவர்கள் கல்வி பயிலும் நிலையில், அந்தப் பள்ளியில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பிரியா என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.
ஆனால், அவர் அதிக நாட்கள் விடுப்பு எடுத்து வருவதாகவும், பள்ளியில் பாடம் நடத்தாமல், மாணவர்களுக்கு அலைபேசியை வழங்கி, அதன்மூலம் பாடங்களை வீடியோவாக பதிவு செய்து வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதாகவும்.
இதனால், மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாக கூறி, மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் ஆசா அஜித் அவர்களிடம் முறையாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளித்துள்ளனர்.