இந்தியாவில், 84% பேர் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக, செல்ஃபோனை பயன்படுத்துவதாக Wakefit நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இதில், பெரும்பானமையானோர் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டோர் என தெரியவந்துள்ளது. மேலும், 58% பேர் இரவு 11 மணிக்கு மேல் தூங்க செல்வதாகவும், 44% பேர் தூங்கி எழுந்தாலும் சோர்வாக உணர்வதாகவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக 59%பேர் பணிநேரத்தில் தூக்க கலக்கத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.