எஸ். காரைக்குடி நடுநிலைப்பள்ளி 70வது ஆண்டு விழா

53பார்த்தது
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி யூனியனுக்குட்பட்ட S. காரைக்குடி நடுநிலைப்பள்ளியின் 70வது ஆண்டு விழா முன்னாள் மாணவர்கள் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், 1-ஆம் வகுப்பு மாணவிக்காக ஊக்கத்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், வட்டாரக் கல்வி அலுவலர் ஜான் சார்லஸ் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் ஆண்டனிச்சாமி, ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆசிரியர்கள் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும், மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி