பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம்

72பார்த்தது
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி கண்மாய் கரை பகுதியில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம், பேரூராட்சி தலைவர் நஜுமுதீன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பேரூராட்சி
துணைத் தலைவர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார்துணைத் தலைவர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் (பொறுப்பு) சண்முகம் வரவேற்றார். கூட்டத்தில், பேரூராட்சியின் வரவு-செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும், உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தனர். கவுன்சிலர் நாகூர் மீரான் பேசுகையில்: புதிய சந்தை அமைப்பதை நிராகரிக்க வேண்டும், ஏற்கனவே செயல்படும் சந்தையே தொடர வேண்டும்.
வடிகால் வசதி – 17-வது வார்டில் ஜாகிர் உசேன் தெருவில் வடிகால் கட்டவேண்டுமென வலியுறுத்தி பேசினார். திமுக கவுன்சிலர் செய்யது ஜமிமாபேசுகையில்: குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் உடனே சரி செய்ய வேண்டும். சாக்கடை முறையான வடிகால் வசதி – சேதமடைந்த வாய்க்கால்களை உடனே பழுது பார்க்க வேண்டும்.
கவுன்சிலர்கள் ஷேக், ராஜவேல் பேசுகையில்:
புதிய பேருந்து நிலையம் தற்போது கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்கு எந்த பேருந்துகளும் செல்லவில்லை. பேருந்துகள் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி