காரைக்குடி - Karaikudi

சிவகங்கை: லஞ்சம் வாங்கிய சப்ரிஜிஸ்டர், ஆவண எழுத்தர் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்டனூர் ரோடு பகுதியை சேர்ந்த வைரவேல் என்பவர் தனது சொத்தை விற்பனை செய்ய பத்திரப்பதிவு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். பொறுப்பு அலுவலர் முத்துப்பாண்டி பத்திரம் பதிவு செய்ய ரூ 60 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பத்திரம் பதிவு செய்த பின்னர் கூறியதை தொடர்ந்து பத்திரப்பதிவு நடைபெற்றது. ஆனால், லஞ்சப் பணம் கொடுக்காததால் பத்திரத்தை தர மறுத்ததால் ஆத்திரமுற்ற வைரவேல் சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.  இதைத்தொடர்ந்து, இன்று அவர்களின் வழிகாட்டுதலின்படி ரசாயனம் தடவிய ரூ. 60,000-தை பத்திர எழுத்தர் புவனப்பிரியாவிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புக் காவல்துறை டி.எஸ்.பி ஜான் பிரிட்டோ தலைமையிலான போலீசார், சார் பதிவாளர் முத்துப்பாண்டி ஆவண எழுத்தர் புவனப்பிரியா ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் மேல்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


சிவகங்கை