நம் முன்னோர்கள் தேயிலை, காபிக்கு பதிலாக காலை, மாலை நேரங்களில் மல்லி, சுக்கு, மிளகு, இவற்றைப் பொடித்து அத்துடன் கருப்பட்டி, சேர்த்து காய்ச்சி குடித்து வந்துள்ளனர். இதன் மூலம் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியையும், ஜீரண சக்தியையும் பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். தேயிலைக்கு பதிலாக கஞ்சாங்கோரை என்ற துளசி குடும்ப தாவரத்தின் இலைகளையும் பயன்படுத்தி வந்துள்ளனர். இது சளி, இருமல் ஆகியவற்றுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக இன்றளவும் பயன்படுகிறது.