சேலம்: ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 2, 91, 854 பேருக்கு அபராதம்
சேலம் நகரம் |

சேலம்: ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 2, 91, 854 பேருக்கு அபராதம்

சேலம் மாவட்டத்தில் விபத்துகளை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: - வாகன ஓட்டிகளின் நன்மைக்காக சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும், மெதுவாக செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை சிலர் கடைபிடிப்பதில்லை. ஹெல்மெட் அணிந்து சென்றதால் பலர் விபத்துகளில் சிக்கி உயிர் பிழைத்து கொண்டதை பார்க்க முடிந்துள்ளது. அதனால் தான் போலீசார் சார்பில் ஹெல்மெட் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். மாவட்டம் முழுவதும் இந்தாண்டில் இதுவரை ஹெல்மெட் அணியாமல் சென்ற 2 லட்சத்து 91 ஆயிரத்து 854 பேருக்கு போலீசார் மூலம் தலா ரூ. 1, 000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் பலர் அந்த அபராத தொகையை கட்டாமல் உள்ளனர். அதனை அவர்கள் விரைவில் செலுத்த வேண்டும். ஹெல்மெட் அணிவது அவசியம் என்பதை வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரும் உணர்ந்து அதை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வீடியோஸ்


தமிழ் நாடு