மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதனை, தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பாரத தேசத்தில் இந்தியா கூட்டணி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஆகையால், தமிழ்நாட்டில் வருகிற 2026ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி உறுதியாக அமையும் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளார்.