சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்ப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயா. இவரது மகன் விஜய் (வயது23). இவர் கடந்த 10-ந் தேதி வீட்டில் இருந்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் வந்து தோசம் இருப்பதாகவும், அதை கழிக்க வேண்டும் என்று கூறி வாலிபரை மயக்கி பீரோவில் இருந்த 3½ பவுன் நகையை திருடி சென்றனர்.
இதுதொடர்பாக புகாரின் பேரில் இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது திண்டிவனம் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர், திருவண்ணாமலையை சேர்ந்த சின்னா (22) ஆகியோர் என தெரிவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.