சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள அமானி கொண்டலாம்பட்டி கரட்டூர் பகுதியில் ஒரு மின்சார டிரான்ஸ்பார்மரில் மா்ம நபர் 350 லிட்டர் ஆயில் திருடி சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு வந்த உதவி பொறியாளர் சாரதா டிரான்ஸ்பார்மரை பார்வையிட்டார். இது குறித்து அவர் கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.