சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வைகுந்தம், அ. புதூர், வெள்ளையம்பாளையம், நடுவனேரி, கனககிரி, மகுடஞ்சாவடி ஆகிய பகுதிகளில் தி. மு. க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பச்சமுத்து தலைமை தாங்கினார். இதில், சங்ககிரி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் செந்தில்குமார் கலந்து கொண்டு பேசும்போது, வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சங்ககிரி சட்டமன்ற தொகுதி அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற நாம் கவனமாக உழைக்க வேண்டும்.
அடுத்து தி. மு. க. ஆட்சிதான். இதனால் கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக உழைக்க வேண்டும், என்றார்.
இக்கூட்டத்தில், மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் உள்ள 12 ஊராட்சிகளிலும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 1500-க்கும் மேற்பட்ட தி. மு. க. வினருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பாகநிலை முகவர்கள், கிளை செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.