“பிரியாணி இருந்தால் பீர் இருக்கும்” - சிக்கலில் சிக்கிய அமைச்சர்

64பார்த்தது
தெலங்கானா மாநில வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா, மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். குடும்ப உறவினர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய சுரேகா, “இன்று நமக்கு பண்டிகை நாள். அதிகமாக டான்ஸ் ஆடுபவர்களுக்கு அதிக பிரியாணி வழங்கப்படும். பிரியாணி இருந்தால் பீர் இருக்க வேண்டும். அதிகம் டான்ஸ் ஆடுபவர்களுக்கு அதிக பீர் வாங்கி கொடுக்கப்படும்” என கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி