
ஏற்காட்டில் அ. தி. மு. க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏற்காடு நகர பகுதியில் அ. தி. மு. க. நிர்வாகிகள் மற்றும் பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை வரவேற்று பேசினார். சித்ரா தலைமை தாங்கினார். எம். ஜி. ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அருண்குமார். தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயகாந்தன், ஓமலூர் மணி எம். எல். ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அ. தி. மு. க. மாவட்ட செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசியலில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இதனை கண்டு தி. மு. க. வினர் அச்சத்தில் உள்ளனர். பா. ஜனதாவுடன் கூட்டணி என்று தெரிந்தவுடன் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் பயத்தில் நடுங்குகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் அ. தி. மு. க. மகத்தான வெற்றி பெறும். தமிழக அரசியலில் ஒரு சாணக்கியராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்து வருகிறார். வருகிற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வருவார். அப்போது மலைவாழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுப்பார். அதற்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று பேசினார்.