சார்வாய்சாலைமறியல் போராட்டக்காரர்தீக்குளிக்க முயற்சிபரபரப்பு

77பார்த்தது
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மணி விழுந்தான் பகுதியில் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வீஸ் சாலை இல்லாததால் பேருந்து தங்கள் பகுதிக்கு வர முடியவில்லை என கூறி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது இதனால் அதிருப்தி அடைந்த மணி விழுந்தான், சார்வாய் தென்குமரை புனல்வாசல் சாத்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சர்வீஸ் சாலை அமைத்து தர வேண்டும் என கோரி சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களை டிஎஸ்பி வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சித்தார் அப்போது ஈஒருவர் மறைத்து வைத்திருந்து மண்ணெண்ணெய் உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு தீ குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் உடனடியாக தடுத்து அவரை அப்புறப்படுத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி