சேலம் மாவட்டம் வாழப்பாடி கிழக்குக்காடு கணபதி நகர் பகுதி சேர்ந்தவர் அங்கமுத்து மனைவி கமலம் இவரது மகன் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டிக் கொண்டிருப்பதால் அங்கு பார்வையிட சென்றுள்ளார். கமலம் அப்பொழுது அருகில் இருந்த வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார் அப்பொழுது அங்கு வந்த சொகுசு காரில் இருந்து நான்குபேர் நோட்டமிட்டதாக கூறப்படுகிறது வீட்டில் அமர்ந்திருந்த கமலத்திடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்ட மர்மநபர் கமலத்திடம் திடீரென கழுத்தில் இருந்த 10 பவுன்தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் கமலம் கூச்சலிடையே அப்பகுதி மக்கள் காரில் வந்த மர்ம நபர்களை துரத்தி பிடிக்க சென்றுள்ளனர். கார் மின்னல் வேகத்தில் சென்றதால் திருடர்களை பிடிக்க முடியாமல் வாழப்பாடி காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.