வாழப்பாடிகெட்அவுட்ஸ்டாலின் விளம்பர பதாகை உடன் பாஜகவினர்கோஷம்

57பார்த்தது
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. எக்ஸ் வலைதள பக்கத்தில் கெட் அவுட் மோடி உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கெட் அவுட் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி சுங்கசாவடி பகுதியில் நேற்று இரவு முன்னாள் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் 20 க்கும் மேற்பட்டோர் கெட் அவுட் ஸ்டாலின் என்ற வாசகத்தோடு கையில் பதாகை ஏந்தி நின்றனர். தொடர்ந்து கெட் அவுட் ஸ்டாலின் என்ற முழக்கங்களையும் எழுப்பினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி