சேலம் குப்பனூர் அருகே கார் கவிழ்ந்து 2 பேர் காயம்

83பார்த்தது
சேலம் செவ்வாய்பேட்டை அய்யர் தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் சிவகிருஷ்ணா (வயது 24). இவர், நேற்று தர்மபுரி மாவட்டம் அரூருக்கு காரில் சென்றுவிட்டு மாலையில் சேலம் திரும்பினார். காரை அவர் ஓட்டினார். அப்போது, அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த குப்பனூர் அருகில் வந்தபோது கார் திடீரென நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் கார் கண்ணாடி மற்றும் முன்பகுதி சேதமானது. காருக்குள் இருந்த சிவகிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். விபத்து குறித்து அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி