சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் அடுத்த வெள்ளாளகுண்டம் பகுதியில் 45 அடி உயரத்தில் உலகிலேயே மிக உயரமான மகா அதிகார நந்திசிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையில் சிறப்பு அம்சமாக நந்தி வயிற்றுக்குள் உள்ளே சென்று தரிசிக்கும் அமைப்பில் மலையிலிருந்து தோன்றும் வடிவில் 15 அடி உயரத்தில் சிவபெருமான் சிலை, 18 சித்தர்கள், பைரவர் மற்றும் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளாளகுண்டம் பகுதியைச் சேர்ந்த ராஜவேல் மாற்றுத்திறனாளி ஆன இவர் நந்தீஸ்வரனுக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்க முடிவு செய்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நந்தீஸ்வரன் சிலை அமைக்கும் கட்டுமான பணி தொடங்கியது. 45 அடி உயரத்தில் மிக நேர்த்தியாக உலகிலேயே மிக உயரமான மேற்கு நோக்கி நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நந்தீஸ்வரர் உடலுக்குள் சென்று சிவபெருமான் தரிசிக்கும் வடிவில் 15 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.