வாழப்பாடி: பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து.. குழந்தைகள் காயம்

52பார்த்தது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பகடுப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் வழக்கம் போல் இன்று காலை பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வருவதற்காக கருமந்துறை பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் ஓட்டுநர் குன்னூர், அத்திரிப்பட்டி உள்ளிட்ட பகுதியிலிருந்து 22 பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தபோது மூங்கில்குத் இறக்கம் பகுதியில் முன்பக்க டயர் ராடு கட்டாகி வளைவு பகுதி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். உடனடியாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் குழந்தைகளை மீட்டு கருமந்துறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இரண்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு குழந்தைகள் படுகாயம் அடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். பள்ளி குழந்தைகளின் வேன் கவிழ்ந்து 
விபத்து உள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் இதுகுறித்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி வாகனத்தை அதிவேகமாக ஓட்டுநர் ஓட்டி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளி வாகனத்தை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி