ஏற்காடு - Yercaud

சேலம் அருகே உடலில் டீசலை ஊற்றி தீக்குளித்த டிரைவர் சாவு

சேலம் அருகே உடலில் டீசலை ஊற்றி தீக்குளித்த டிரைவர் சாவு

சேலம் செங்கரடு தாத்தையங்கார் பேட்டையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். லாரி டிரைவராக இருந்தவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபடுவார். அதே போல் கடந்த 29ஆம் தேதி இரவு குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் அதிக கோபமடைந்த அவர் உடலில் டீசலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.  அங்கிருந்தவர்கள் தீயை அணைத்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தராஜ் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా