உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டம் 2-வது நாளாக கலெக்டர் ஆய்வு

51பார்த்தது
உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்ட முகாம் ஏற்காட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பல்வேறு இடங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டார். 2-வது நாளான நேற்று ஏற்காடு டவுன், ஜெரினா காடு, முருகன் நகர் ஆகிய பகுதிகளில் தினமும் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப்பணிகள் குறித்து கலெக்டர் பிருந்தாதேவி நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், பொதுமக்களிடம் அடிப்படை தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் அவர் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிப்பதற்காக தரமான உணவு பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்றும், சமையலறை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகின்றதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தினார். ஆய்வின்போது, உதவி கலெக்டர் அபிநயா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி