வாழப்பாடி கனிமவளம் கொ ள்ளை கண்டுகொள்ளாத வருவாய்துறை.

85பார்த்தது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நடுப்பட்டி கோதுமை அடிவாரப் பகுதியை வருவாய்த் துறையின் அனுமதியோடு டிப்பர் ஜேசிபி நம்பர் இல்லாமல் மூன்று ஜேசிபி இயந்திர வாகனம் அடையாளம் தெரியாத பத்துக்கு மேற்பட்ட டிப்பர் லாரிகள் ராஜாபட்டினம், கோலத்துகோம்பை, நீர்முள்ளிகுட்டை போன்ற பகுதிகளில் தரிசு, குன்று அரசு புறம்போக்கு நிலங்களில் கனிம வளத்தை சுரண்டி எடுக்கும் மாபியா கும்பல் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் பல லட்சம் மதிப்பிலான கனிம வளத்தை தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை மற்றும் வீட்டுமனை பட்டாக்களுக்கு கொண்டு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை பேளூர் வருவாய் ஆய்வாளர் புகார் தெரிவித்தால் நான் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளேன் என கூறுகிறாராம். நீர்முள்ளிகுட்டை கிராம நிர்வாக அலுவலர் பலமுறை தகவல் கொடுத்தும் அலட்சியத்தோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளேன் நாளை வந்து பார்க்கிறேன் என கூறுகிறாராம் இப்படி லஞ்சம் வாங்கிக்கொண்டு கனிமவள கொள்ளையை கண்டு கொள்ளாமல் இருப்பது இயற்கை வளத்தை பேணிக்காக்கும் அரசு அதிகாரிகள் மாஃபியா கும்பலுடன் கைகோர்த்துக்கொண்டு வாழப்பாடி வட்டாட்சியர் பார்வைக்கு கொண்டு செல்லாமல் தனி ராஜாங்கமே நடத்தி வருவதாக கனிம வளம் கொள்ளையடிக்கும் மாபியாக்கள் பலரும் பொதுவெளியில் பரவலாக பேசப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி