சேலம் மாவட்டம் வாழப்பாடி பக்கம் உள்ள கருமாபுரம் வெள்ளக்குட்டை தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வி, இவர் நேற்று (ஏப்ரல் 2) மாலை வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்தார். அப்போது டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் முகவரி கேட்டுவிட்டு, பின்னர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். உடனடியாக கலைச்செல்வி வீட்டிற்குள் சென்று தண்ணீரைக் கொண்டுவந்து கொடுத்தார். அதனை வாங்கிய அந்த நபர் திடீரென கலைச்செல்வியின் கழுத்தில் இருந்த மூன்று பவுன் நகையைப் பறித்துக்கொண்டு டூவீலரில் தப்பிச்சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி காரிப்பட்டி போலீசில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் மர்ம நபரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.