சங்ககிரி - Sankari

சங்ககிரி: தம்பியை காப்பாற்றச் சென்ற அண்ணன் மின்சாரம் தாக்கி பலி

சங்ககிரி: தம்பியை காப்பாற்றச் சென்ற அண்ணன் மின்சாரம் தாக்கி பலி

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் கிராமம் செவுதாயக்காடு பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 73). இவர் சேலம் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கு அலுவலராக பணி புரிந்து ஓய்வுபெற்றவர். இவர் மனைவியுடன் வசித்து வந்தார். இவர்களின் பக்கத்து வீட்டில் தனபாலின் தம்பி சேகர் (63), மனைவி சரஸ்வதியுடன் வசித்து வந்தார். நேற்று(அக்.17) தனபால் அவரது வீட்டில் இருந்தபோது பக்கத்து வீட்டில் இருந்து அவருடைய தம்பி மனைவி சரஸ்வதியின் அலறல் சத்தம் கேட்டது. உடனே தனபாலும் அவருடைய மனைவி பானுமதியும் அங்கு ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது சேகர், சரஸ்வதி, இருவரும் கீழே விழுந்து கிடந்தனர். சேகர் கையில் மின்சார வயரை பிடித்தபடி கீழே கிடந்தார். தனபால் வேகமாக சென்று தனது தம்பி சேகரின் கையில் இருந்த வயரில் மின்சாரம் இருப்பது அறியாமல் பிடித்து இழுத்தார். அப்போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அதன்பிறகு தனபாலின் மனைவி மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தனபாலுவை உடனடியாக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தனபால் இறந்து விட்டார். அதே நேரத்தில் மின்சாரம் தாக்கி மயங்கி கிடந்த தனபாலின் தம்பி சேகர், அவருடைய மனைவி சரஸ்வதி ஆகியோர் மகுடஞ்சாவடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా