சேலம் மாவட்டம் இடங்கணசாலைைய அடுத்த மடத்தூர் தீப்பாஞ்சம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்தது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் மண்டல பூஜைகள் நிறைவு விழா நடந்தது. கோயில் அறங்காவலரும், கொங்கணாபுரம் ஒன்றியக்குழு தலைவருமான கரட்டூர் மணி தலைமையில் பக்தர்கள் குழுவினர், பூஜைக்கு தேவையான பூக்கள், சந்தனம், பழங்கள், வாசனை திரவியங்கள் மற்றும் யாக வேள்விக்கு தேவையான மூலிகை பொருட்களுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர். கோவில் முன் அமைக்கப்பட்டு இருந்த யாகசாலையில் அதனை சேர்த்தனர்.
தொடர்ந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரம் முழங்க பல்வேறு யாக வேள்வி நடந்தது. தொடர்ந்து நடந்த அபிஷேக ஆராதனை நடந்தது. தீபாஞ்சம்மன் தங்க கவச சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மடத்தூர் தீப்பாஞ்சம்மன் கோயில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.