ஈஷா மையம் தொடர்பான ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. 10 நாட்களுக்கு ஒருமுறை காவல்துறையினர் சென்று ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்ற பெண்களின் தந்தை தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. வேண்டுமானால் உங்கள் மகள்களை நீங்கள் சென்று பார்க்கலாம், அதற்கு எந்தத் தடையும் இல்லை என தெரிவித்தது. ஈஷா மையத்திற்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தடையில்லை என்றும் விசாரணைகளை மாநில அரசு நடத்தலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.