கெங்கவல்லி - Gangavalli

சேலம்: கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு சாலையில் ஓடும் மழை நீர்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. கெங்கவல்லி வீரகனூர் நடுவலூர், தெடாவூர், கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. கெங்கவல்லி நகரப் பகுதியில் கொட்டு தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது ஆத்தூர் செல்லும் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் கழிவு நீர் கால்வாய் வழிதடத்தை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மழை மழைநீர் செல்ல வழி இல்லாததால் சாலையில் மழை நீர் ஓடியது இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர் மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా