சேலம்: முதல்வர் அறை முன்பு பேராசிரியர்கள் தர்ணா போராட்டம்
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் எம் ஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் மற்றதுறை பேராசிரியர்களிடம் தரக்குறைவாக பேசுவதாக கூறி கல்லூரி முதல்வரிடம் பேராசிரியர்கள் புகார் அளித்த நிலையில் கல்லூரி முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி முதல்வர் அறை முன்பு 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முதல்வர் (பொறுப்பு) செல்வராஜ் தர்ணாவில் ஈடுபட்ட பேராசிரியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த கௌரவ விரிவுரையாளர்கள் மணிகண்டன் சுபாஷ் ஆகிய இருவரும் தர்ணாவில் ஈடுபட்டிருந்த நபர்களிடம் ஏன் அனைத்து ஆசிரியர்கள் என புகாரில் தெரிவித்தீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர். கல்லூரி முதல்வர் முன்னிலையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் மாணவர்கள் மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது தொடர்ந்து அங்கிருந்து மற்ற ஆசிரியர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர் ஆத்தூர் ஊரக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் கல்லூரியில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பேராசிரியர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி விரிவுரையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி வளாகப் பகுதியில் மீண்டும் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.