அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணை 33. 33 அடி உயரமும், 139. 60 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டதாகும்.
இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 63 மி. மீ மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம், முழுக் கொள்ளளவான 139. 60 மில்லியன் கன அடியை இன்று (29ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு எட்டியது.
இதையடுத்து, அணையின் வலது மற்றும் இடது கரை வழியாக 66 கன அடி உபரிநீா் வெளியேறி வருகிறது. இதனால், அணையின் கரையோர பகுதியில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பவானி உபகோட்ட நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், வரட்டுப்பள்ளம் அணை இன்று (29ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் முழு கொள்ளளவான 139. 60 மி. கன அடியை எட்டி அணையின் வழிந்தோடிகள் வழியாக சுமார் 66 கன அடி உபரிநீர் வெளியேறி வருகிறது.