தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா என மாவட்ட வாரியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு மேள்கொள்ள உள்ளார். முதற்கட்டமாக இன்று (நவ.5) கோவையில் தொடங்குகிறார். காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை செல்கிறார். காலை 11.30 மணியளவில் விளாங்குறிச்சியில் ரூ.114.16 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஐடி வளாகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, போத்தனூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.