கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருவனந்தபுரத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், அப்பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால், நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அறுவை சிகிச்சை செய்யக்கூடிய இடத்திற்குள் மழை நீர் புகுந்ததால் மருத்துவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.